படம்  : கிரீடம்
இசை : ஜி.வி. பிரகாஷ் (வெயில் படத்தின் இசையமைப்பாளர்)
பாடியவர்கள் : சாதனா சர்கம்
பாடல் : நா.முத்துக்குமார்

பல்லவி
======

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் (அக்கம்பக்கம்)

சரணம்-1
=======

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான் உன் மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம் யாருமில்லா)

சரணம்-2
=======

நீயும் நானும் சேரும்முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதைத் தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

னானனனா னானனனா னானான னானா
லாலலலா லாலலலா லாலால லாலா

2 comments so far

  1. [...] BlogsOfRaghs :: பல்லவி & Charanam [...]

  2. raghs on

    நன்றி சுப்ரா என்னுடைய சுட்டியை உங்கள் பதிவில் தந்தமைக்கு.

    உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இடமுடியவில்லை ஏனெனில் அந்தப் பதிவின் சுட்டி இங்கே எங்கள் அலுவலக எல்லைக்குள் புறக்கணிப்பட்டிருக்கிறது (சுட்டி ஆங்கிலத்தில் ‘movie’ என்ற சொல்லைக் கொண்டிருப்பதால்).

    பிறகு அலுவலக எல்லைக்கு வெளியில் உள்ள கணினியில் சென்று பின்னூட்டமிடுகிறேன்.


Leave a reply