Archive for the ‘thathuvams’ Category

konamoonaanu yosippor sangam

புதுசு கண்ணா புதுசு…

சில தத்துவங்கள்…

நாய்க்கு நாலு கால் இருக்கலாம். அதால லோக்கல் கால், எஸ்.டி.டி.கால், ஐஎஸ்டி கால் ஏன்.. ஒரு மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது!

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.. காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்…ஆனால் ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும், அவரால் ஒரு குரலில் தான் பேச முடியும்!

என்ன தான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை உன்னால பாக்க முடியாது!

மீன் பிடிக்கிறவனை மீனவன்னு சொல்லலாம்.. ஆனா நாய் பிடிக்கிறவனை நாயவன்னு சொல்ல முடியுமா?

டிநகர் போனா டீ வாங்க முடியும்.. ஆனா விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போடமுடியாது!

தேள் கொட்டினா வலிக்கும்…பாம்பு கொட்டினா வலிக்கும்…. முடி கொட்டினா வலிக்குமா?

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்..காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.. பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

பொங்கலுக்கு கவர்மெண்ட்ல லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி, தோசைக்குக் கொடுப்பாங்களா?

கோலமாவில கோலம் போடலாம்..ஆனா கடலைமாவில கடலை போடமுடியுமா?

லைப்ல ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்.. தலையில் ஒண்ணுமே இல்லைன்னா கிளார் அடிக்கும்.

ஏழு பரம்பரைக்கு ஒக்காந்து சாப்பிட காசு இருந்தாலும், பாஸ்ட் புட் கடைல நின்னுக்கிட்டுத் தான் சாப்பிடணும்.

மண்டை உடையாம இருக்கறதுக்காக ஹெல்மெட் போடலாம்..ஆனால் ஹெல்மெட் உடையாம இருக்கறதுக்காக மண்டையப் போடமுடியுமா?

இப்படிக்கு கோணாமூணான்னு யோசிப்போர் சங்கம்

நீங்க இதப்படிச்சிட்டு கண்டிப்பா கொஞ்சமாவது சிரிச்சிருப்பீங்கன்னு நம்பறேன்.. 😉

Advertisements